Skip to main content

முகவரி...!
















விலாசங்கள் தொலைத்த
வழிப் போக்கனாய் தேடல்களில்
மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!

மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!

காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!


தேவா. S

Comments

dheva said…
//விலாசங்கள் தொலைத்த
வழிப் போக்கனாய் தேடல்களில்
மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!//

ஒவ்வொரு நாளும் எதையோ தேடி கடைசியில எல்லாம் கிடைச்சும் நிம்மதியா இருக்க முடியாம என்னதான் வேணும் நமக்குன்னு நினைப்போம் அப்படிப்பட்ட நினைப்பையும் வேற ஒரு எண்ணம் வந்து கெடுத்துடும்....ஒரு சினிமாவோ, டிராமாவோ இல்லை வேற நடை முறை அரசியல் பேச்சோ..அப்புறம் அப்படி நினைக்கிறத விட்டுபுட்டு மறுபடி கார் வாங்கணும் பங்களா வாங்கணும்னு அதை பத்தியே யோசிச்சு அந்த எண்ணங்களையே மேய்க்க ஆரம்பிச்சுடுவோம் அப்புறம் எங்க எது நிம்மதின்னு நமக்கு புரியப் போகுது.. இது தாங்கண்ணா முத பாரா...!

//மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!

//எப்பாவாச்சும் எங்கயாச்சும் யாரச்சும் செத்துப் போய்ட்டாங்கன்னா அங்க போய் பாருங்க..எல்லா முகங்களையும்... ஒரு மாதிரி இருளடைஞ்சு..10% செத்துப் போன ஆள நினைச்சும் 90% நாமளும் நாளைக்கு இப்படித்தானே அப்படின்ற ஆள் மன எண்ணத்தில் சோகமாவும் இருப்போம் இதுதான் உண்மை. மேல் மனசு நமக்கு வேடிக்கை காட்டும் என்னவோ முழுக்க முழுக்க இறந்தவரை நினைத்துதான் சோகம்னு...அப்டி இல்ல பாஸ்... நம்மள பத்தி நினைக்கிற இடம் அது...அந்த இடத்தில நாம தேடிட்டு இருக்குற நிம்மதியோட முகவரிக்கான துருப்பு சீட்டு கிடைக்கிற மாதிரி..அந்த துருப்பு சீட்டும் அந்த இடத்திஅ விட்டு வந்ததுக்கப்புறம் மத்த விசயத்துல மூழ்கி நாம கோடி வருசம் இருக்க போறதா நினைச்சு...ரொம்ப சந்தோசப்பட்டு.. நான் நான் அப்படின்ற அகங்காரம் ஏறி...முகவரி மறுபடியும் மிஸ்ஸிங்.....

//காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//

//காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//

எப்டி இருந்தாலும் ஒரு நாளைக்கு அட்ரஸ் கிடைக்காமலா போய்டும்..(அடச்சே எல்லோருக்கும் என்ன ஒரு பயம் பாருங்க...!!!) முகவரி கிடைக்கிற அன்னிக்கு அதை படிக்கும்போது தெரியும் உண்மையிலேயே எந்த அட்ரசும் இல்லேன்னு....அந்த உண்மை தெரியும் போதே..ஓராயிரம் முகவரிகள் (புதுசு புதுசா மனுசங்க பொறக்குறாங்கள்ள அத்த சொன்னேன்..அவுங்க எல்லாரும் தொலைச்சுட்டு தேடி மறுக்கா அலையறதுக்காக) தோன்றிக் கொண்டே இருக்கும்..!
திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை....
Chitra said…
அருண் பிரசாத் said...

திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை....



.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... எப்படிங்க சிரிக்காம இப்படி கமென்ட் போடுறீங்க?
Chitra said…
தேவா..... இந்த முகவரி கவிதையில், உயிர்ப்பும் - இறப்பும் - கொண்டு வரும் மனதின் தேடல்களை அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
dheva said…
அருணு...@... இரு இந்தா வர்றேன்....!
dheva said…
சித்ரா.. @ சாரத்தை கரெக்டா விளங்கிக்கொண்டீங்க... நன்றி.. ! கொஞ்சம் அருணுக்கு புத்தி மதி சொல்லுங்க...!
VELU.G said…
//மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!
..............
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!
//

ரொம்ப அற்புதமாய் சொல்லியுள்ளீர்கள் தேவா
முடிவில்லாமல் தொடரும் ஓட்டமாய் நடந்து கொண்டே இருக்கிறது இது
//திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை...//

அருண் சொன்னதுங்க! நம்ப மூளைக்கும் ஒன்னு எட்டலைங்கோ..

அதனால அருண் சொன்னதை ரிப்ப்ப்ப்பிட்ட்ட்ட்ட்டூ...
வினோ said…
தேவா ரொம்ப நேரம் கவிதை படிச்சேன்.. கீழ பார்க்கல.. அப்பரும் தான் உங்க விளக்கம் படிச்சேன்.. எல்லோருக்கும் இந்த தேடலும், பயமும் இருக்க தானே செய்கிறது..
இந்த பதிவுல எனக்கு இரண்டு சந்தோசம் ..
ஒண்ணு : நம்ம தேவா அண்ணன் சின்ன பதிவு போட்டிருக்கார் ..
இரண்டு : அதே மாதிரி அதுக்கானா விளக்கத்தையும் சொல்லிருக்கார்.
விளக்கங்களைப் படித்த பிறகு புரிந்து கொண்டேன் ..
பகவத் கீதை மாதிரி இருக்கு ..!!
நல்லவேளை தெளிவுரைய போட்டுட்டீங்க. அந்த பயம் இருக்கட்டும்.

மனித வாழ்க்கையையே கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள். இறப்பைப் பார்த்தும் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுறான்னா, இறப்பே இல்லன்னா இவங்கள்ளால் என்னவெல்லாம் பண்ணுவாங்க?
\\தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//
கவிதையும், விளக்கமும் அருமை!
அருண்பரசாத் ன் பின்னூட்டம்...:-))
க ரா said…
ஒன்றுல் சொல்ல இயலாமல் மனதை முடக்கீட்டிங்க... பாம்பாட்டி சித்தர கேட்டதா சொல்லுங்க :)
Mahi_Granny said…
. எண்ணங்களை மேயச் சொல்லுகிறாரே என்று யோசித்துக் கொண்டே படித்தேன். நல்ல வேளை விளக்கவுரை கொடுத்தீங்க. அப்பாடா , முகவரி தெரிந்தது .( கவிதை என்றால் காத தூரம் எனக்கு . sorry )
கவிதையை மற்றும் விளக்கம் அருமை தல
////திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை.... ///

///அருணு...@... இரு இந்தா வர்றேன்....! //

superrrrrrrr.. :-)))
//மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!//

அப்படியே பொழுது போனாலும் தான், நாம சும்மா விட்ருவமா..என்ன??

மொத்த கவிதையும் நல்லா இருக்கு.. அதிலும், உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க..
புரியாம கஷ்டப்பட கூடாதுன்னு, விளக்கமும் குடுத்திட்டீங்களே? ஹ்ம்ம்.. சூப்பர்.. :-)
நன்றி தேவா அண்ணா.நன்றாகக இருக்கிறது .
terror உம கவிதை எழுதுகிறார் ,கதை எழுத்துகிறார் அதனால் இது அவருக்கு உபயோக படும் .

terror எழுதும் கவிதைகளுக்கு இந்த மாதிரி தெளிவுரை எழுதணும் கேட்டுக்கோ terror .
தெளிவுரை என்றால் நேற்று அடிச்ச சரக்குக்கு தெளிய உரை அப்படின்னு நினைக்க கூடாது
யோ மாப்ஸ்!! உன் கவிதைவிட உன் விளக்கவுரை ரொம்ப கொழப்புது...அருமை சொல்லி பாராட்டினவங்க எல்லாம் முன்னாடி வாங்க நான் கேள்வி கேட்கனும்...

(சும்மா மாப்ஸ்....)
//மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!//

கவிதை அருமை தேவா அண்ணா....விளக்கம் மிக மிக அருமை ....
Nirosh said…
முகவரி இல்லாக் கவிஞன் நான்... உங்கள் முகவரி சொன்ன கவி பார்த்து வியந்தேன் வாழ்த்துக்கள்...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த