Skip to main content

களம்.....!













ட்ரெய்லர் IV

ஒரு மண்ணில் நான் பிறந்தேன்...சில மக்களுடன் நான் வளர்ந்தேன்...ஏதேதோ புசிக்கக் கொடுத்தார்கள்....எதை எதையோ உடுக்கக் கொடுத்தார்கள்....! சிரிக்கவும் அழவும் முறையற்றுப் போயிருந்த புத்தியில் எங்கே சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்....

ஒரு இடத்தில் ஒரு உடலை கிடத்தி சுற்றியிருந்து எல்லோரும் அழுவதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது...சப்தமாய் சிரித்தேன்....ஏன் இப்படி என்று...? யாரோ என்னை தனியே அழைத்துக் கொண்டுபோய்...இதன் பெயர் இறப்பு என்று போதித்தார்கள். எனக்கு சிரிப்பு வருகிறது என்று கனைத்து சிரித்து எள்ளி நகையாடிய கணத்தில் என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள்...காலம் கற்றுக் கொடுக்கும் என்று.....

ஏதோ ஒரு நாளில் நான் நேசித்த ஒருவன் உடல் செயலற்று கிடந்தது பார்த்து நான் அசைத்து, அசைத்து முயன்று முயன்று அவன் எழவில்லை என்று அறிந்து சோர்ந்து போய் நின்ற கணத்தில் அவன் எழமாட்டான் என்று யாரோ சொல்லிய போது திமிராய் ஏன்? என்று அவரைப் பார்த்து முறைத்த போது அவர் மெலிதாய் சிரித்து நகர்ந்ததின் காரணம் அறியவில்லை நான்....

ஆனால் என் நேசத்துகுரியவன் இன்னும் எழவில்லை.... ஆனால் எனக்குள் அவன் மீண்டும் நடக்கவேண்டும் என்னோடு பேசவேண்டும், சிரிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது....ஆனால் அது நிகழாது என்று உணர்ந்தபின் என்னுள் ஒரு கலக்கமும் இறுக்கமும் ஏற்பட...ஏதோ வித்தைகளை மூளை பரப்பி கட்டளைகளை பிறப்பிக்க...

என் கண்கள் பனிக்கத்தொடங்கின....என் உணர்வினை வெளிக்காட்ட நான் சப்தமிட்டு கத்தத் தொடங்கினேன்.....சுற்றி நின்ற கூட்டம் அதை அழுகை என்றது....!!!!!!

அன்று யாரோ ஒருவர் அழுத போது அவரின் பிரிய உறவுகள் இதைத்தான் செய்தன என்று ....என்னிடம் கூட்டம் கூறியது....! .மரணமென்றால் என்னவென்று அறியவும்...மரணம் யாருக்கேனும் சம்பவித்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும்மென்றும் எனக்கு இப்போது சொல்லிக் கொடுத்தார்கள்.

நான் கேட்டுக் கொண்டேன். ஒரு உயிர் ஜனித்து நம்மிடம் இருந்து மறைந்து போகும் போது அதை அப்படியே கொண்டு போய் புதைத்தோ, அல்லது எரித்தோ விடுவதில் நமக்குள் ஒரு சமநிலை வாரது...அதனால் நமது அன்பின் வெளிப்பாடாய் அழுது தீர்க்கு பொழுதில் நமது சுமைகள் மனம் விட்டு விலகும் என்றும் பயிற்றுவித்தார்கள்.

வாழ்ந்து மறைந்த மனிதனை நினைவு கூறல் என்ற சில சடங்குகள் ஏற்படுத்தி அதை மையப்படுத்தி நினைவு கூறலை ஒரு நன்றிக்கடன் ஆக்கினார்கள். நாளடைவில் மரணமும், அதன் பின் சடங்குகளும் பெரியதளவில் பின்பற்றப்பட்டன. .இப்படிப்பட்ட செயல்களை செய்யவும் சீராய் ஒரு கட்டுக்குள் இருக்கவும் மனித ஆழ்மனமே (கவனிக்க!!!!!!!) கட்டளைகள் பிறப்பித்தது......

யாம் ஜனித்த மண்ணில் இருந்து எமக்கான வரைவுகளை யாமே தீர்மானித்தோம். தண்ணீரை மிருகம் போல யாம் தலை குனிந்து நாவால் பருகி வந்தோம்....அங்கே முதன் முதலில் ஒருவன் கையால் அள்ளிப்பருகும் செயலை கடினப்பட்டு செய்து...அதில் அதிக நீர் குடித்து....அதை எமக்கும் பயிற்றுவித்தான்....

அதை பயிற்றுவிப்பதில் பயில்வதில் ஒரு சுகம் இருந்தது பலன் இருந்தது. இப்படி பயிற்றுவிக்கப்பட்ட எதிலெல்லாம் சுகம் இருந்ததோ எதில் எல்லாம் பலன் இருந்ததோ அதை யாம் திரும்ப திரும்ப செய்தோம். அது எமது வழமையாகிப் போக எமது சந்ததிகளும் அதனை பின்பற்றத் தொடங்கினார்.

யாம் எல்லாம் கற்றுத் தேறி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சில அத்து மீறல்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. தண்ணீரை கைகளால் அள்ளிப் பழகவும் பருகவும் பழக்கிக் கொடுத்த சமுதாயத்தில் அதை ஒரு கட்டளையாக பிறப்பித்து பிறர் கொண்டு நீர் இறைத்து தனக்கு தருவிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கலவரங்கள் செய்தது. அப்படி கலவரம் செய்த கூட்டத்தில் உடல் வலிவும் உடலில் அதிக உணவுப் பொருட்கள் கூடி அதீத கொழுப்பும் கூடிப் போயிருந்தது.

இப்போது கையால் நீர்பருக பழகிக் கொடுத்தவனை .....விமர்சிக்க ஒரு கூட்டம் உருவானது. எமது இஷ்டம் போல் நாம் நீர் பருகுவோம்...நீ பயிற்றுவித்ததால்... ஒரு கூட்டம் அதை துஷ்பிரோயோகம் செய்தது....உமது கற்பிப்பும், கட்டுப்பாடும் எமக்கு வேண்டாம் என்று கொக்கரித்தது.

அப்படி கொக்கரித்த கூட்டம் கூறுவதில் அர்த்தஙகள் இருப்பது போல தோன்றி சிலர் கையால் நீர் பருக மாட்டோம்….எமது வசதிப்படி செய்வோம் என்றும் கையால் நீர் பருகும் ஒரு செயல் முறையை விமர்சிக்கத் தொடங்கினர்..............

ஆனால் கையால் நீர் பருகி பழகி அதன் பயன்பாடு அறிந்த கூட்டம்...சப்தமில்லாமல் இவர்களை கட்டுப்படுத்தி செயல் செய்யவைத்து பயன் பெற வைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது........அதற்காகவே...சில யுத்திகளைப் பின்ன ஆரம்பித்தது....அந்த யுத்தியின் பின்னால் கூட்டு வாழ்வில் சீரான ஒரு சுமுகமான நிலை வேண்டும் என்ற பேரவா மிகுந்திருந்தது..............

மரணம் என்றால் என்ன என்று எம் சமுதாயத்திற்கு போதிக்கப்பட்டதும்.....அதன் பின் முதன் முதலில் எமக்கு நீர் பருக பயிற்றூவிக்கப்படதும் போல காலம் மாற மாற எம்மை சீரான ஒரு மக்கள் கூட்டமாக இருக்க வைக்க கட்டுப்பாடுகள் மேல், கீழ், இடம் வலம்.........என்று கூட்டி , குறைத்து........விரிவடைந்து கொண்டிருந்தது போல....அதை துஷ்பிரோயோகம் செய்ய ஒரு கூட்டமும் அந்த துஷ்பிரோயோகத்தால் பாதிக்கப்பட்ட கூட்டம் தன் விருப்பப்படி வாழ்வேன் என்று கோஷமிடலும்...........தொடந்து கொண்டுதான் இருந்தது..........

இதுதன் நமது களம்......!!!!!!!


இன்னும் விரிவாக பேசுவோம் தோழர்களே காத்திருங்கள்.......


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!!!!!!!



தேவா. S



Comments

சமூகம்தான் கட்டுபாடுகளை கொண்டுவந்தது. ஆனால் அதுவே தவறான சட்டங்களை மாற்றியும் உள்ளது. ஒரு பேச்சுக்கு வேண்டுமானால், சமூகம் வேண்டாம் என சொல்லலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் சமூகத்தை ஒதுக்கி வைக்க இயலாது
சமூகத்தில் கட்டுப்படுகள் வருகின்றன, மீறல்கள் வருகின்றன, மாற்றங்கள் வருகின்றன,....
சிலர் ஆற்றில் அடித்துச் செல்லும் மரக்கடை போல அதுவழி செல்லவே விரும்புகின்றனர்/செல்கின்றனர், சிலர் வழிமாறி எதிர்நீச்சல் அடிக்க முயல்கிறார்கள்!
அன்பின் வெளிப்பாடாய் அழுது தீர்க்கு பொழுதில் நமது சுமைகள் மனம் விட்டு விலகும் என்றும் பயிற்றுவித்தார்கள்.


//

பெரும்பாலும் இது தான் உண்மை அண்ணா... அன்புக்குரியவர் பிரியும் தருணங்களில் அழுகையால் தான் அந்த இழப்பை ஓரளவு சரி செய்ய முயல்கிறோம்..
//ஒரு மண்ணில் நான் பிறந்தேன்...///

தெரியும். அந்த மண்ணுதான இப்ப உங்க தலையெல்லாம் இருக்குது?
இது எனக்கு புரிஞ்சிடுச்சு. நல்ல கருத்துக்கள். அதனால நோ கும்மி
கட்டுப்பாடுகள் மேல், கீழ், இடம் வலம்.........என்று கூட்டி , குறைத்து........விரிவடைந்து கொண்டிருந்தது போல....அதை துஷ்பிரோயோகம் செய்ய ஒரு கூட்டமும் அந்த துஷ்பிரோயோகத்தால் பாதிக்கப்பட்ட கூட்டம் தன் விருப்பப்படி வாழ்வேன் என்று கோஷமிடலும்...........தொடந்து கொண்டுதான் இருந்தது........../////

கட்டுப்பாடுகள் என்ற ஒன்றை வைத்தால் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்க தான் செய்யும்
குறைத்து........விரிவடைந்து கொண்டிருந்தது போல....அதை துஷ்பிரோயோகம் செய்ய ஒரு கூட்டமும் அந்த துஷ்பிரோயோகத்தால் பாதிக்கப்பட்ட கூட்டம் தன் விருப்பப்படி வாழ்வேன் என்று கோஷமிடலும்...........தொடந்து கொண்டுதான் இருந்தது..........//

இது நெத்தி அடி......(ஐயோ இது பாண்டியராஜன் நடித்த படம் ....எதுவும் உள் குத்து இல்லப்பா )
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது போன்றே இருக்கிறது என்றால் இல்லை என்பதற்கும்... இல்லை என்று சொன்னால் இருக்கிறது என்பதற்கும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.. இருப்பார்கள்..
dheva said…
//தெரியும். அந்த மண்ணுதான இப்ப உங்க தலையெல்லாம் இருக்குது? //


சி.போ..... @ தம்பி நம்ம தலையில இருந்த பிரச்சினை இல்லாப்பா....அதை வாயில யாரும் போட்டுடக்கூடாது....எச்சரிக்கையா இருக்கணும்....ஹா.ஹா...ஹா..!
இந்த சமூகத்தில் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன... அதை எப்படி மீறுவது என்ற வழிமுறைகளும் இருக்கின்றன... இந்த சமூகத்தின் நிலை கண்டு வருந்தி வேண்டாம் என்று ஒதுக்க நினைத்தாலும் நமது நடைமுறை வாழ்வில் சமூகத்தோடு ஒன்றித்தான் போகவேண்டிருக்கிறது... அது இல்லை என்று அடித்துச் சொல்ல யாராலும் முடியாது...

ட்ரைலர் நல்லாப் போகுதுண்ணா...
உங்க ட்ரெய்லர் நல்லாப் போயிட்டிருக்கு அண்ணா .,
ஆனா நாம தண்ணிய அப்படியே குடிக்காதீங்க அப்படின்னு சொன்னா அதெல்லாம் முடியாது நான் எனக்கு புடிச்ச மாதிரிதான் குடிப்பேன் அப்படின்னு சொல்லுறாங்க ... இல்லப்பா அப்படி குடிசீனா நல்லா இருக்காதுன்னு சொன்னா தனிமனித சுதந்திரத்துல தலையிடாத அப்படின்னு சொல்லுறாங்க ..!!
///அப்படி கலவரம் செய்த கூட்டத்தில் உடல் வலிவும் உடலில் அதிக உணவுப் பொருட்கள் கூடி அதீத கொழுப்பும் கூடிப் போயிருந்தது.////

உண்மைதான் கொழுப்புக் ககூடினாலே எல்லாம் சனியனும் வந்துவிடுகிறது!
//பன்னிக்குட்டி ராம்சாமிNovember 20, 2010 3:45 PM
இது புனைவா//
உங்களுக்கு புனைவு வியாதி தாக்கி இருக்கு
/// LK said...
//பன்னிக்குட்டி ராம்சாமிNovember 20, 2010 3:45 PM
இது புனைவா//
உங்களுக்கு புனைவு வியாதி தாக்கி இருக்கு///

இது ஒருவேள பூனையால வந்ததா இருக்குமோ?
//
இது ஒருவேள பூனையால வந்ததா இருக்குமோ?///

எலியால வந்திருக்கும் ..!!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ யாரு அந்த எலி?

//
நான் இல்ல ..!!
ராம்சாமி சார் எனக்கு இன்னிக்கு வரைக்கும் அந்த புனைவுக்கான அர்த்தம் தெரியலை சொல்லிடுங்களேன்!
அது புனைவே இல்ல எஸ்.கே., நிஜமாவே ஈமெயில்ல வந்த ஒரு கதை. அதுல ஒரு சின்ன பாய்ண்ட மட்டும் வெச்சுக்கிட்டு கொஞ்சம் பொட்டிதட்டிப் பாத்தா இப்பிடி வந்துடுச்சு, சரி கொஞ்சம் கொழப்படி பண்ணூவோமேன்னு, பின்நவீனத்துவம்னு போட்டுட்டேன், அம்புட்டுதான்! அது வேற எங்கேயோ போய்டுச்சு ... ஹி..ஹி....!
நாகரீகம் அப்படிதான் வளர்கிறது. ஆனால் அதுவே போக போக வேறு ரூட்லில பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது.

உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லவா? சும்மா கேளுங்க! தமாஷா இருக்கும்.

ஒரு ஆசிரமத்தில ஒரு குரு மாணவர்களுக்கு பாடம் நடத்திட்டு இருந்தாராம். ரொம்ப மும்மரமாக பாடம் நடத்திட்டு இருக்கும்போது பூனை ஒண்ணு குறுக்கும் நெடுக்குமாக நடந்துப் போய் அந்த வகுப்பை ரொம்ப டிஸ்டர்ப் செய்யுமாம்.

இதைப் பொறுத்துக்க முடியாத குரு, அந்த பூனையை எப்படியாவது பிடிச்சு கட்டிப்போடுங்க! அப்பத்தான் பாடம் நடத்துவேன்னு சொல்லிட்டாராம். மாணவர்களும் அந்த பூனையை எப்படியோ பிடிச்சு கஷடப்பட்டு கட்டிப்போட்டாங்களாம்.

தினமும் இதே சங்கதி தான் நடந்ததாம். பாடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூனையை பிடிச்சு கட்டிப்போட வேண்டியது. இந்த விஷயம் அப்படியே நடந்து நடந்து அது பழக்கமாகவே மாறிபோச்சாம்.
அது எது வரை போச்சுன்னா...அந்த குரு செத்துப்போயிட்டாரு. அந்த குருவோட ஸ்தானத்திற்கு சிஷ்யன் ஒருவன் வந்திட்டான். ஆனால் இந்த பூனையை பிடிச்சு கட்டிப்போடுகிற வழக்கம் மட்டும் மாறலையாம். அந்த பூனை செத்தப்பின்னாடியும், மாணவர்களோடு அந்த புது குரு சேர்ந்து மீட்டிங்க் நடத்தினாராம். இப்போ பூனை செத்துப்போச்சே!

பூனையில்லாம பாடம் நடத்த முடியாதே என்ன செய்றதுன்னு யோசிச்சி, ஒரு புது பூனையை ஊரில இருந்து பிடிக்க வரசெய்து, அதை கட்டிப்போட்டு பின்னாடி பாடம் நடத்தினாங்களாம்.
நம்ப நாகரீகமும் அப்படித்தான் ஆகிப்போச்சு! உண்மை எங்கேயோ இருக்க, பொய்களையும் புனைவுகளையும் கட்டி இதுதான் எங்க நாகரீகம், எங்க கலாச்சாரம்ன்னு காலி பெருங்காய டப்பாக்களை பத்திரப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

காலம் மாற மாற காலுக்கு போடும் செருப்போட சைஸ் மாறிப்போயிடுது. ஆனா அதை விடமா போட்டுப்பேன்னு சொல்றது ஒண்ணும் அறிவு சார்ந்த நாகரீகமோ, கலாச்சரமோ இல்லை. மாற்றங்களை மனம் திறந்து ஏற்றுக்கொள்வோம். அப்போது தான் நகர்ந்துக்கொண்டிருக்கின்ற நதியாக இருப்போம். இல்லையென்றால் தேங்கிக்கிடக்கின்ற கழிவுநீர் குட்டையாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
dheva said…
//காலம் மாற மாற காலுக்கு போடும் செருப்போட சைஸ் மாறிப்போயிடுது. ஆனா அதை விடமா போட்டுப்பேன்னு சொல்றது ஒண்ணும் அறிவு சார்ந்த நாகரீகமோ, கலாச்சரமோ இல்லை. மாற்றங்களை மனம் திறந்து ஏற்றுக்கொள்வோம். அப்போது தான் நகர்ந்துக்கொண்டிருக்கின்ற நதியாக இருப்போம். இல்லையென்றால் தேங்கிக்கிடக்கின்ற கழிவுநீர் குட்டையாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது//

என்னது நானு யார...@ ஆமாம் பங்காளி...கால் பெருசு ஆக ஆக செருப்பு சைஸ்தான் மாத்தி அதையும் கால்லதான் போட்டுகுவோம்....!! எந்த காலத்துலயும் அதை எடுத்து கையில மாட்டிகிட்டு....அதுதான் நாகரீகம் மாற்றம்னு சொல்ல மாட்டோம் இல்லையா?
ட்ரைலர் சூப்பர் தல.
//ஆமாம் பங்காளி...கால் பெருசு ஆக ஆக செருப்பு சைஸ்தான் மாத்தி அதையும் கால்லதான் போட்டுகுவோம்....!! எந்த காலத்துலயும் அதை எடுத்து கையில மாட்டிகிட்டு....அதுதான் நாகரீகம் மாற்றம்னு சொல்ல மாட்டோம் இல்லையா?//

ஆமாம் தேவா! காலில போடற செருப்பை யாரும் கையில போட்டுக்க மாட்டாங்க! அவ்வளவு அறிவில்லாம யாராவது இருக்காங்களா என்ன? ஆனா நான் சொன்னது நடக்குதா இல்லையா? பிஞ்சிப்போன பழைய செருப்பை விடாம மாட்டிக்கிட்டு திரிகிற நிலைமை இன்னமும் நீடிக்குதா இல்லையா?

சாதி ஒரு பிஞ்சிப்போன பழைய செருப்பு! மதம் ஒரு பிஞ்சிப்போன பழைய செருப்பு! பெண்ணை வீட்டிக்குள்ளே அடிமைகளாய் பூட்டிவைக்கிறது பிஞ்சிப்போன பழைய செருப்பு! பண செருக்கால, பதவி திமிராலே மனிதர்களை மதிக்காத தனம் பிஞ்சிப்போன பழைய செருப்பு! தப்புன்னு தெரிஞ்சாலும் அதை மாத்திக்க முடியாத கொள்கை வெறி பிடிச்சவங்க மாட்டிக்கிறது எல்லாமுமே பிஞ்சிப்போன பழைய செருப்பு!

இது எல்லாம் நாகரீகத்தின் அணிகலன்களா என்ன?
உங்க களம் அமர்க்களம்..!!
dheva said…
என்னது நானு யாரா.@ மேலே நீங்க சொல்ல் இருக்குற எல்லாம் அணிகலன்கள்னு யாரு சொன்னா?????

இது எல்லாத்தையும் நாங்களும்தான் எதிர்க்கிறோம்....!!!!!! சாதியே உன்னை வெறூக்கிறேன்னு 4 பாகம் எழுதினவன் கிட்ட பேசுற பேச்சா இது....ஹா..ஹா..ஹா..!

ஒரு விசயம் யாருக்கும் தெரியல.....பங்காளி...!


நாகரீகம் என்பது வேறு....! கலாச்சாரம் என்பது வேறு......ஆமாம்..நாகரீகத்தை உள்ளடக்கி நகர்கிறது.. அப்டேட் பண்ணிட்டு நக்ர்வதுதான் கலாச்சாரம்.

சும்மா பெண்ணடிமை அது ஜாதி மதம்னு பேசிட்டு இருங்க.. அது எல்லாம் தொலைச்சு தலை முழுகி வாழ்க்கய நடத்துற நிறைய பேர்கள நிறய கிராமங்கள.. எனக்குத் தெரியும்....

சாதி, மதம் இது எல்லாம் விட்டு வெளில வர்றது இயல்பான நிலைக்கு நாம திரும்ப வர்ற மாதிரிதான்....அதுல என்ன சிறப்பு இருக்கு எப்போ பாத்தாலும்ப்இதை நான் விட்டுட்டேன்.. விட்டுட்டேன்னு சொல்றதுல...

நிறைய பேர இத விட்டு தள்ளிட்டு வெளில வாங்கன்னு நானும் சொல்றேன்..அதுக்காக நான் இதை தினத்தந்தி பேப்பரலயா பங்காளி போட முடியும்.....!!!!

நம்ம தகுதிகள் நமக்குள்ளேயே இருக்கணும்..இயல்புகள்தான் வெளிப்படணும்....!

செருப்ப கைல போடுவீங்களான்னு நான் கேட்ட உதாரணம்... யாரு வேணா நினைச்ச எப்டி வேணா வாழலாமன்னு கேட்ட கேள்வி பங்காளி...!!!!!

நான் நினைக்கிறேன்.. நீங்க வேற மூடுல இருக்கிங்கன்னு...!
Ganesan. G said…
anna unga blog virumbi padichitu irukken...
ungaloda karpanai+ezhuthu nadai enakku pidichi irukku...
Unknown said…
மரணம்(ஒரு ராணுவ வீரன் பார்வையில்) -

நான் வாழ மறுத்தபோது என்னை விட்டு விலகி விலகிச்சென்றது.

நான் வாழ நினைக்கும்போது என்னருகே வந்து நின்றது.
மண்ணின் புதல்வி said…
கொரியன் மொழில கூட ஆன்மீகம் இருக்கா?
யாருமே சொல்ல மாட்றாங்கப்பா :)

( நாகரீகத்தின் அழகான பார்வை :))
நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா இப்போ நாட்டோட நிலைமைய பாத்தா நம்ம இவ்வளவு நாள் வளர்த்து வந்த நல்லவைகள் எல்லாமே காணாமப்போயிடுமோன்னு பயமாத்தான் இருக்கு.
//இப்போ நாட்டோட நிலைமைய பாத்தா நம்ம இவ்வளவு நாள் வளர்த்து வந்த நல்லவைகள் எல்லாமே காணாமப்போயிடுமோன்னு பயமாத்தான் இருக்கு. ///

அதெல்லாம் நல்லது இல்லைனுதான் சொல்றாங்க சகோதரி
@என்னது நானு யாரா

நண்பரே, எங்க செருப்பை போடணுமோ அங்கதான் போடணும். வயலில் செருப்பு போட்டுகிட்டுதான் வேலை பார்ப்பேன்னு சொன்னா உதைப்பாங்க...
VELU.G said…
Dear Deva

My hearty wishes to my sweaty akshya. I wish you a happy birth day.
Ramesh said…
அருமையான் பதிவு தேவா..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த