Skip to main content

ஹாய்....31.12.2010!




வழக்கம் போல மற்றும் ஒரு நாள் தான் இது.......ஆனால் வருடத்தின் கடைசியாகிப் போனதால் வரும் அடுத்த வருடத்தை வரவேற்க தயாராய் இருக்கிறோம் எல்லோரும்.....

புது வருசம், பழைய வருசம், நாள், கிழமை எல்லாமே மனிதன் உருவாக்கிக் கொண்டது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு வருடம். பூமி எப்போது சூரியனில் இருந்து தெறித்து விழுந்ததோ அன்றிலிருந்து வருடம் கணக்கிடப்பட்டிருக்காது அல்லவா...? நமது கணக்கீடுகளுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது.

' போன வருசம் .. செமடா மச்சி..வர்ற வருசம் அப்டியே இருக்கணும் '

' போன வருசம் செம கடுப்புடா மாமா வர்ற வருசமாச்சும் ஒழுங்கா இருக்கணும் '

மாறி மாறி பேச்சுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வருடங்களையும் நாட்களையும் தாண்டி மனிதனை கட்டுப்படுத்தும் செயல்கள் இரண்டு....

ஒன்று.....அவனின் மனம் எந்த திசையில் வேலை செய்து செயல்கள் செய்கிறதோ அதன்படியும்,மற்றொன்று அவன் சார்ந்துள்ள சூழல் என்ன மாதிரி அனுபவங்களை அவனுக்கு கொடுக்கிறது என்பதை பொறுத்து பெரும்பாலும் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைந்து போகிறது. நல்ல வருடமாய் அமைவது இப்படித்தானே இருக்க முடியும்......?

இது தாண்டி...இயற்கை என்ற பிரமாண்டமும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

இயற்கையின் சீற்றமும், மாற்றமும் மிக பலமான காரணியாகவும் நம்மின் கட்டுக்குள் இல்லாததாகவும் இருந்து நம்மை மாற்றி விடுகிறது. ஒட்டு மொத்த உலக வாழ்க்கையில் இருக்கும், பொருள் மற்றும் பொருளற்ற எல்லாவுமே......ஒரு வித சீரான அதிர்வுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன...அந்த அதிர்வுகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் பிரபஞ்சமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த அதிர்வுகள் ஒத்த அதிர்வுகளாக இருந்தால் இயற்கையும் கட்டுப்படும்.

இயற்கைச் சீரழிவுகளுக்கு காரணம் எதிர் மறை சிந்தனைகளும் செயல்களும்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? முழுக்க முழுக்க இல்லாவிட்டாலும் இவையும் ஒரு காரணிகளாத்தான் இருக்கின்றன. வாழ்த்துக்கள் என்பவை புது வருடம், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிககைள் மட்டுமின்றி எல்லா தினமும் நமக்குள் வாழ்த்துக்களையும் அன்பினையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இந்த நாட்களில் பயின்று அதை எப்போதும் பின் பற்ற வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒருவர்....எப்போதும் காலை வணக்கம் என்று சொல்லமாட்டார்.......மாறாக காலை வாழ்த்துக்கள், மதிய வாழ்த்துக்கள் இரவு வாழ்த்துக்கள் என்று சொல்லுவார். வாழ்த்தி வாழ்த்தி மனம் ஒரு வித கொடுத்தலில் திளைத்து இலேசாகி அன்பை அடுத்தவர்க்கு பரிமாற அவரிடம் இருந்து நமக்கும் அதுவே கிடைக்கிறது. நாம் நமக்கு அன்பும், சந்தோசமும் , ப்ரியமும் மற்றவரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.......

ஒரு சிறிய கணக்கு போட்டுப் பாருங்கள்......எவ்வளவு பெறுகிறோம் என்றும் எவ்வளவு கொடுக்கிறோம் என்றும்....கணக்கு டேலி ஆகுதா? ஆகாது........உலகமே நம்மிடம் நல்ல மாதிரி நடக்கவேண்டும் ஆனால் நாம்.....என்ன கொடுக்கிறோம் மனிதர்களுக்கு?

அன்பையும் நேசத்தையும் கொடுக்கலாமே?

அதிகபட்சம் ஆறுதல் வார்த்தைகளையாவது பகிரலாம்.! சரி விடுங்க நான் இப்டிதான் ஏதேதோ பேசிகிட்டு இருப்பேன்....சரி விசயத்துக்கு வருவோம் (அப்போ இன்னும் விசயத்துக்கே வரலையான்னு கேக்குறீங்களா)

கடந்த வருட இறுதியை விட இந்த வருடம் மிக்க மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது. என்னைச் சுற்றிலும் ஆரோக்கியமான உறவுகள், நட்புகள் என்று கடவுள் என்னை ஆசிர்வதித்து இருக்கிறான். அப்படி இப்படி என்று எழுத ஆரம்பித்து இப்போது ஒரு கட்டமைப்புக்குள் வந்திருப்பதாக கருதுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் எனது உக்கிரமான எழுத்துக்கள் இன்னும் வெளிப்படையாக எழுதவே இல்லை.....

ஒரு கருத்தினை சொல்லவும் விவாதிக்கவும் சுமூகமான சூழலும் சரி, தவறு என்று நம்மைச் சொல்ல நண்பர்கள் கூட்டமும் மேலும் பேசும் வார்த்தைகளை கேட்க ஒரு சிறிய அட்டென்சனும் கொடுக்க வேண்டும்........

இதுவரை நான் செய்ததெல்லாம்.....கத்தி கத்தி கூச்சலிட்டு உங்களை எல்லாம் என்னை நோக்கித் திரும்புமாறு ஒரு செயலைத்தான் செய்திருக்கிறேன். கருத்துக்களை சொல்ல இப்போது ஒரு திடமும் வலுவும் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வலுவும் திடமும் கொடுத்தது நீங்கள்தான். ஒரு ஆயிரம் பேர் என்னை வாசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை ஆனால் ஒரு 200 பேர் வாசித்தாலும் அவர்கள் ஆழ்ந்து வாசிப்பவர்கள்....

வெறும் வாசிப்பு தாண்டி அவ்வப்போது தவறுகளை உரிமையாகச் சுட்டிக் காட்டக்கூடியவர்கள், ஒவ்வொரு முறை எழுத்தின் போக்கு மாறும்போதும் கடிவாளமிட்டு சரி செய்தவர்கள், உண்மையான உறவாய் எப்போதும் உடன் இருப்பவர்கள்.....என்று

நிர்ப்பந்தத்துக்குள் வராத அற்புதமான வாசிப்பாளர்கள் கிடக்கப்பெற்றது ஆசிர்வாதம்தானே....? நான் இந்த வருட இறுதியில் மகிழ்வாய் இருப்பது நியாயம்தானே?

கொஞ்சம் ஒரு ஓய்வு தேவை என்று மனம் சொல்கிறது. மூளை வேண்டாம் என்கிறது. போராட்ட இறுதியில் குறைந்த பட்சம் 15 நாளாவது வாரியர் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவும் எட்டப்பட்டது.

இந்த இடத்தில் ஒரு கதை சொல்ல ஆசைப்படுகிறேன்......

மரம் அறுக்கும் ஒரு பட்டறையில் ஒருவன் வேலை செய்து வந்தான். அவனுக்கு மாத சம்பளமாக ரூபாய் 2000 கொடுத்தார் முதலாளி. பலவருடங்கள் வேலை செய்து வருகிறான் அவன். ஒரு நாளைக்கு அவனால் 200 மரங்கள் அறுக்க முடிந்தது. இப்படிப்பட்ட சூழலுல் இன்னொரு வேலைக்காரனை அமர்த்தினார் அந்த முதலாளி அவனுக்கும் ரூபாய். 2000 சம்பளம் கொடுத்தார் முதலாளி.....ஆனால் அந்த புது தொழிலாளியோ ஒரு நாளைக்கு 500 மரம் அறுத்து கொடுத்தான்.

முதலாளி மெத்த மகிழ்ச்சி அடைந்து....அட என்ன இது புரடக்டிவிட்டி அதிகமாய் இருக்கிறதே என்று அவனின் சம்பளத்தை இன்னும் ஒரு ஆயிரம் உயர்த்தி ரூபாய் 3000 கொடுத்தார். இதைப்பார்த்த பழைய தொழிலாளி கோபப்பட்டு அவனும் மிக வேகமாக வேலை செய்தானாம். ஆனால் அவனால் கஷ்டப்பட்டு மரம் அறுத்தாலும் அதிக பட்சம் 250 மரம்தான் அறுக்க முடிந்ததாம். ரொம்ப கடுப்பாகி முதலாளியிடம் சென்று சண்டை போட்டு இருக்கிறான்......500 மரம் அறுக்கவே முடியாது அவன் ஏதோ ஏமாற்றுகிறான்.....நான் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன் என்று சொன்னானாம். அதற்கு முதலாளி சொல்லியிருக்கிறார் நீ போய் அவனிடம் பேசிப்பார் எப்படி முடிகிறது என்று கேள்? என சொல்லி நீயும் 500 ம்ரம் கூடுதலாய் அறுத்தால் உனக்கும் சம்பள உயர்வு என்றும் சொல்லிவிட்டார்......

இவன் ரொம்ப் கடுப்பாகி புதிதாய் சேர்ந்த தொழிலாளியிடம் போய் கேட்டிருக்கிறான் எப்படி உனக்கு மட்டும் இது சாத்தியம்? நானும் தலைகீழாய் நின்றாலும் 500 மரம் அறுக்க முடியவில்லையே....உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டிருக்கிறான்........

அதற்கு புது தொழிலாளி கேட்டிருக்கிறான் நீ எப்படி மரம் அறுப்பாய் என்று கேட்க....அதற்கு பழைய தொழிலாளி தொடர்ந்து வேகமாய்த்தான் செய்வேன் என்று சொல்லியிருக்கிறான்......அதற்கு புதுத் தொழிலாளி சிரித்து விட்டு சொல்லியிருக்கிறான்.... நீங்கள் வேலை செய்தது எல்லாம் சரிதான் ஆனால்.....நான் எப்படி செய்வேன் தெரியுமா....?

வேலை ஆரம்பித்த பின்னால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு பிறகும் ஒரு 5 நிமிடம் எனது ரம்பத்தை தீட்டிக் கொள்வேன்...அதனால் ரம்பம் கூராகி அறுக்கும் வேகம் அதிகரிக்கும் என்று சொல்லிவிட்டு.......நீங்களும் அப்படி செய்யுங்கள் உங்கள் உற்பத்தியை பாருங்கள் என்று சொன்னானாம்..........

கதையின் கரு என்னவென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்....ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நாம் நம்மை அப்டேட் செய்து கொண்டே இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கையில் நம்மை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் முன்னேற வைக்கும். எனக்கும் ஒரு இரண்டுவாரம்.....என்னை ஆசுவாசுப்படுத்திக் கொள்ளவும்......
கழுகிற்காக செய்யவேண்டிய சில பணிகளைச் செய்யவும்..நிச்சயமாய் உதவும்...ஒரு கூர் தீட்டல்தான்.!

கூச்சலும் குழப்பமுமின்றை தனியாய் அமரல் ஒரு சுகம்............அடுத்த நிகழ்வுகளை அது சீராக்கும். இரண்டு வாரம் ஒரு சிறு பருவம்தான்........

மற்றபடி..என்னை குடும்பத்தில் ஒருவனாய் நினைத்து வாசிக்கும் உறவுகளுக்கும், மேலும் பின்னுட்ட மற்றும் ஓட்டு அரசியலில் சிக்காமல் அவர்கள் வலைப்பூக்களுக்கு நான் வந்து பின்னூட்டம் மற்றூம் வாக்குகள் இட்டாலும் இடாவிட்டாலும் பொருட்படுத்தாமல் என்னை வாசிக்கும் வலையுலக உறவுகளுக்கும்...........என் உயிர் தம்பிகளுக்குக்கும், எனது மாமா மச்சான் பங்காளிகளுக்கும்......மற்றும் எல்லா அன்பான நட்புக
ளுக்கும்.............

என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!

வாழ்வில் எல்லா வளமும் பெற்று, அன்பும், பாசமும், நிம்மதியைத் தரும் செல்வமும் மிகுந்து வரும் வருடம்.........அமைதியாய் நமது வாழ்க்கையில் நுழைய எனது பிரார்த்தனைகள்!

அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S





Comments

//ஒரு சிறிய கணக்கு போட்டுப் பாருங்கள்......எவ்வளவு பெறுகிறோம்//

நீங்க இவ்வளவு நாலும் ஒண்ணுமே தந்தது இல்லையே ..கணக்கு நான் ரொம்ப வீக்கு அண்ணா
இந்த கதையை நான் ஏற்கனவே படித்து இருக்கேன் இருந்தாலும் இந்த சமையதிற்கு ஏற்ற கதை....கூர்மை படுத்த வேண்டும் சரி தான் ஆயுதம் எதுவாக இருந்தால் என்ன கூர்மை தான் முக்கியம்
தேவா அண்ணா ஒரு டவுட்டு கிட்டத்தட்ட என்னோட வயது தான் உங்களுக்கு ஆனாலும் பழைய பாட்டு தான் பெரும்பாலும் வைகிறீங்க ஏன் ....நான் மிட் லெவல் சாங் எனக்கு பிடிக்கும் .....ஒருவேளை நீங்க பழமைவாதீயோ
க ரா said…
எழுத்து சித்தருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)
//அன்பையும் நேசத்தையும் கொடுக்கலாமே?//
ஆமா இத சொன்ன டெர்ரர் என்னை ஒரு மாதிரி பார்குறான் .....
நம்மை தினமும் செம்மை படுத்திக் கொள்ள வேண்டும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நல்ல கதை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//வாழ்வில் எல்லா வளமும் பெற்று, அன்பும், பாசமும், நிம்மதியைத்தெரும் செல்வமும் மிகுந்து வரும் வருடம்.//

இவை அனைத்தும் உங்கள் வாழ்கையில் கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா .குட்டி பொண்ணுக்கும்
என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!
அட பாவி அண்ணா அதுக்குள்ள பாட்டை மாத்தி போட்டுடீங்க ....ஒரு கமெண்ட்ஸ் போடா வழி இல்லை .....
karthikkumar said…
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் ..... :))
சரியான முடிவுதான் ஊர்ஸ்.... சிறு ஓய்வு, நல்ல புத்துணர்ச்சி தரும்.... !
//இயற்கைச் சீரழிவுகளுக்கு காரணம் எதிர் மறை சிந்தனைகளும் செயல்களும்தான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? முழுக்க முழுக்க இல்லாவிட்டாலும் இவையும் ஒரு காரணிகளாத்தான் இருக்கின்றன. வாழ்த்துக்கள் என்பவை புது வருடம், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிககைள் மட்டுமின்றி எல்லா தினமும் நமக்குள் வாழ்த்துக்களையும் அன்பினையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இந்த நாட்களில் பயின்று அதை எப்போதும் பின் பற்ற வேண்டும். //

யோசிக்க வேண்டிய மேட்டரு.. நல்லாச் சொன்னீங்க..
உங்களுக்கும் 365 வாழ்த்துக்கள்.. (அதாங்க.. ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு வருசம் பூரா)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!
Kousalya Raj said…
வாழ்த்துடன் அருமையான ஒரு கதை...

//எல்லா தினமும் நமக்குள் வாழ்த்துக்களையும் அன்பினையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.//

இயன்றவரை நம்மை சுத்தி இருப்பவங்களை சந்தோசமாக வைத்து கொள்வதும், இந்த நல்ல நாளில் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி கொள்வதும் நல்லதொரு உறவை வளர்க்கும்.

விடுமுறையை முடித்து வாருங்கள் தொடர்ந்து விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...படிக்க காத்திருக்கிறேன்...!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிவுலகில் இத்தகைய அன்பு நெஞ்சங்கள் கிடைப்பர் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!!!

அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!

எழுத்தின்மூலம் இணைந்திருப்போம். மகிழ்ந்திருப்போம்.
Angel said…
WISH YOU AND YOUR FAMILY A HAPPY PROSPEROUS NEW YEAR.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சகோ..
நல்ல கதை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
refresh!

good! take ur time magans! happy day! :-)
Kousalya Raj said…
புது டெம்பிளேட் நல்லா இருக்கு !

பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் !!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த