Skip to main content

காற்று....!




















எந்த ஸ்வரத்தினை
ஓதுகிறாய் மரத்திடம் நீ
தலைசயசைத்து...தலையசைத்து...
ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்!

தண்ணீரைத் தடவிச் செல்லும்
ஸ்பரிச சந்தோசத்தில்
அலை அலையாய்
வெட்கத்தை இறைக்கிறது
அந்த மரத்தோரத்து நதி...!

பூக்களுக்குள் புகுந்து..
மகரந்தங்களை கலைத்துப் போட்டு
வண்டோடு அது கொண்ட காதலை
சொல்லிச் சிரித்தபடி செல்லும்...
இந்த காற்றின் பயணம்தான் ...
எதை நோக்கி...?

புல்லாங் குழலுக்குள் புகுந்து
இசையாய் உடை உடுத்தி
செவிகளுக்குள் பயணப்பட்டு
இசையாய் மயங்க வைக்கிறது ...
மனித மனங்களை...!

ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?

மனிதருக்குள் புகுந்து
நினைவுகளில் நிறைந்து
உயிராய் ஊடுருவியிருக்கும்
ஓசையற்ற சூட்சுமத்தினை
உணரத்தானே முடியும்...?
கையிலெடுத்து காட்டவா முடியும்...!

எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?


தேவா. S


Comments

//எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?//


nalla kavithai... kadaisiyil kelviyudan...
காற்றின் கலாட்சேபத்தை..
கண்னருகே காட்டி விட்டீர்கள்..

உள்ளத்தில் உணரத் தான் முடியும்..
உள்ளங்கையில் உட்கார வைக்க முடியாதுன்னு அழகா சொல்லிட்டீங்க..

உங்க ரசனையை ரசித்தேன்.. :-))
Chitra said…
ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?


...wow! lovely way of writing it. nice.
Kousalya Raj said…
காற்றை பற்றிய தேடலும் கடவுளின் தேடலும் ஒன்றா ? இல்லை இரண்டும் ஒன்றா ? இல்ல நீங்க கேட்ட மாதிரி காற்று தான் கடவுளா ?

ரொம்ப யோசிக்க வைக்கிறதே இந்த கவிதை...?! :))

என்ன இருக்கிறது இந்த கவிதையில் என்று யோசிக்க வைப்பதும் படைப்பாளியின் சூட்சுமம் தானோ !?

இன்னும் கற்றுகொண்டே இருக்கிறேன்.....

நன்றி.
ஹேமா said…
காற்றைப்போல கடவுள்.
கடவுளைப்போல காற்று என்று சொன்னால் சரியாகுமா !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த