Skip to main content

அதிகப் பிரசங்கி...!


















சிரிச்சுகிட்டே
இருக்கணும் எப்போ தெரியுமா...? எப்போ நிறைய சேலஞ்சும் ரிஸ்க்கும் லைஃப்ல வருதோ அப்போ....!!! எப்பவுமே ஒரு வேலைய திரும்பி திரும்பி செய்றதுல எனக்கு எல்லாம் எப்பவுமே ஒத்து வராது. தினம் தினம் புது புது விசயம் புது புது ரிஸ்க்.... தலைக்கு நேரே பறந்து கத்தி வர்ற வரைக்கும் நான் பாத்துக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டுதான் இருப்பேன்..ஆனா கத்தி வரதை கவனிக்காம இருக்க மாட்டேன். வரட்டும் பாத்துக்கலாம்...கத்திய வீசுனவனுக்கு என்ன பாத்தா அடப் பைத்தியமே இவ்ளோ தூரம் முன்னாடியே பாத்துட்டியே இன்னும் ஏன் கண்டுக்காம இருக்கன்னு நினைப்பு வரும்...

எனக்குத் தேவை ஒரு 2 செகண்ட் அதுல இருந்து எஸ்கேப் ஆக பட் அந்த ரெண்டு செகண்ட் எப்போன்னு நான் முடிவு பண்ற வேகம் இருக்கு பாத்தீங்கன்னா திட்டமிடாம ச்ச்ச்சுமா டக்கு டக்குனு நடந்துடும். கத்திய எப்பவுமே வீசுறது யாருன்னு கேக்குறீங்களா?????? மனுசன் எல்லாம் ஏன் பாஸ் நம்ம மேல கத்திய வீசப் போறாங்க....நம்ம மேல கத்தி வீசுற ஒரே ஆளு வாழ்க்கைதான்...!

ஒரு சப்தமில்லா வாழ்க்கை வாழும் ஆசையில் பயங்கர பிசியான ஒரு வாழ்க்கை சுழற்சிக்குள்ள மாட்டிகிட்டு தினமும் கனவுகளில் எனது நிசப்த நேரங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியதாயிருக்கு. ஒரு வேலை சாந்தியும் அமைதியுமான ஒரு லைஃப் இருந்திருச்சுன்னா நாம பிசியா இருக்குற மாதிரி எப்பவும் சேலஞ்ச்சிங்கா இருக்குற ஒரு லைஃப் வேணும்னு ஆசை வந்து இருக்குமோ என்னவோ தெரியாது.

பட் இப்போ எனக்கு அப்டி தோணுது. சில நேரங்கள்ல யார்கிட்டயும் பேச மட்டும் பிடிக்காம இல்ல...யாரு பேசினாலுமே அந்த வார்த்தைகள் செவிகளின் வழியே ஊடுருவி மூளைக்குள்ள போயி அங்க ஏற்கனவே செய்தியா குவிஞ்சு கிடக்குற இடத்துல அடிச்சு பிடிச்சு சண்டை போட்டு தானும் ஒரு இடத்தை பிடிக்க முயலும் போது...............மை......காட்............வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்ன்னு கத்தணும் போல இருக்குங்க..!!!

பேச்சு பேச்சு பேச்சு.. பேச்சு .......எங்கு பாத்தாலும் பேச்சு. யாரச்சும் பேசிகிட்டே இருக்காங்க...! எதித்தாப்ல இருக்க ஆளுக்கு தேவையோ தேவையில்லையோ என் புலமைய காட்ட நான் பேசிகிட்டே இருப்பேன் அப்டீன்ற ஒரு புற்று நோய் நிறைய பேருக்கு இருக்கறத உணர்வு பூர்வமா தெரிஞ்சுக்கிட முடியுது. பேசி பேசி உலகத்தை மாத்த முயன்றவங்க எல்லாம் தானே அதுக்கு ஒரு உதாரணமா இருந்தாங்க இப்போ எல்லாம் அப்டீ எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லோருமே ஹிப்போகிரேட்தான் இன்க்ளுடிங் மீ. இதுல என்ன ஒரு மேட்டர்னா சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு அப்டீன்றதுல எத்தனை சதவீதம் வேறு படுறாங்கன் அப்டீன்றத வச்சுதான் அதுல நல்லவங்க கெட்டவங்கன்னு பிரிச்சுக்கிறோம் தட்ஸ் ஆல்.

தனிமை வேண்டும், அமைதி வேண்டும் இப்டி எல்லாம் யோசிக்கும் போது அப்டி தனிமைய அனுபவிக்கும் போதும், அமைதிய தேடி போகும் போதும் லெளகீக பந்தங்களோடு ஏற்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேத்திடனும் அப்டீன்னும் தோணுது. ஏன்னு கேட்டீங்கன்னா இந்த வாழ்க்கை நானா உருவாக்கி கிட்டதா? இல்லை? இந்த பிறப்பு நானே ச்ச்சூஸ் பண்ணினதா? அதுவும் இல்லை எல்லாமே ஒரு செட் அப், கிரியேட்டெட் அல்லது உருவாக்கப்பட்டது.

நான் இப்டி வாழணும் அப்டி வாழணும்னு விரும்புறேன். அப்டி வாழும் போது நான் நினைச்ச மாதிரி சில விசயங்கள் நடக்குது. அப்டி நடக்கும் போது உடனே நான் ப்ளான் பண்ணி அச்சீவ் பண்ணினேன்னு சொல்லிக்கிறேன். அப்டி நடக்காதா போது நான் நினைச்சது நடக்கல அப்டீன்னு ஒரு பில்டப் கொடுத்து வாழ்க்கைய குறை சொல்றேன்.....

ஆக மொத்தம் என்னதான் நாம அப்டி இப்டி அலைஞ்சு திரிஞ்சாலும் சரியா அலைஞ்சு திரியணும் அப்பதான் நடக்குறது ஒழுங்கா நடக்கும். காலையில தூங்கி எழுந்து டீ வேணும்னு நினைச்சுகிட்டே இருந்தா டீ வந்துடுதா என்ன? பால் வாங்கணும், அடுப்ப பத்த வைக்கணும், டிக்காசன வைக்கணும்.. இவ்ளோ இருக்கு.

டீ போடுறது எப்டீன்னு ப்ளான் பண்ணி பத்து பக்கத்து டீட்டெய்ல்ஸ் எழுதலாம். டீ குடிக்கிறது எப்டீன்னு சொல்லிக் கொடுக்கலாம். பட் டீ போடணும்னா.......எந்திரிச்சு போயி நாமதான் வேலை பார்க்கணும் இல்லையா..பேசிட்டே இருந்தா டீ டீயாயிடுமா....அங்க கூட்டத்துல ஒருத்தர் கத்துறார் பாருங்க..எனக்கு மனைவி இருக்காங்கன்னு........ஹா ஹா ஹா பாத்து பாஸ்... ஆணாதிக்கம்னு சொல்லி பிரச்சினை பண்ணிடப் போறாங்க...!

மறுபடியும் ' பேச்சு ' பத்தின மேட்டருக்கு வாங்க.........வழி மாறி போய்ட்டோம்ல....

பேசி எல்லாம் யாருக்கும் யாரும் புரிய வைக்க முடியாது சார். பேசி புரிஞ்சு ஒருத்தர் நீங்க சொல்றத கேக்குறார்னா அது உங்க பேச்சால வந்த மாற்றம் இல்லை. அப்படி மாறும் தன்மை அவர்களுக்குள் ஏற்கனவே இருந்திருக்கிறது. நீங்க இல்லேன்னா கூடா ஏதோ ஒரு காட்சியோ பாடலோ அல்லது புத்தகமோ அந்த வேலைய செஞ்சு இருக்கப் போகுது. இதுக்கு ஏன் நான் பேசி ஒருத்தர மாத்திட்டேன்னு நாம நினைக்கணும்?

லவோட்சூ என்ன பண்ணுவாங்களாம் தினமும் வாக்கிங் போவாங்களாம் பக்கத்து வீட்டுகாரர் கூட. இரண்டு மைல் தூரம் போவாங்களாம் ஆனா எதுவுமே பேசிக்க மாட்டாங்களாம். ஆமால்ல போறது வாங்கிங் அங்க எதுக்கு பேச்சு? நியாயம்தான? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்து இருந்தாங்களாம். அந்த கெஸ்ட்டும் வாக்கிங் வர்றேன்னு கூட வந்தாராம். மூணு பேரும் ரெண்டு மைல் நடந்துகிட்டு இருக்கும் போது காலையில சூரியன் உதயம் ஆகுற காட்சிய பாத்த அந்த பக்கத்து வீட்டுக்காரரோட கெஸ்ட் சத்தமா சொன்னாராம்......' என்னே அழகிய சூரிய உதயம்'னு அவ்ளோதான் நடந்து இருக்கு...

வாக்கிங் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பிய உடன் பக்கத்து வீட்டுக்காரரின் கெஸ்ட் முதல்ல வீட்டுக்குள்ள போயிட்டாராம். அப்போ பாத்து லாவோட்சூ சொன்னாராம் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட " உன் வீட்டுக்கு வந்த கெஸ்ட் ஒரு வாயாடியா இருப்பான் போல இருக்கே? இனிமே கூட்டிட்டு வராத'னு சொல்லிட்டு லாவோட்சூ தன்னோட வீட்டுக்குள்ல டக்குனு போயிட்டாராம்.

இதுல என்ன மேட்டர்னா? சூரிய உதயத்தை மூணு பேரும் பாத்தங்க அது அருமையான சூரிய உதயம்னு அந்த கெஸ்ட்டுகு தோணின வரைக்கும் சரிதான்.. அதை எதுக்கு சத்தமா சொல்லணும்? இது முதல் கேள்வி சரியா? இரண்டாவது கேள்வி அப்டி அழகான சூரிய உதயம்னு மத்த ரெண்டு பேரும் ஃபீல் பண்ணியிருந்தா அது அவுங்களுக்கே தெரியும் தானே? திஸ் இஸ் செகண்ட் கொஸ்ஸின்...ஹா ஹா..ஹா இருங்க இருங்க இன்னும் இருக்கு மூணாவது கேள்வி என்ன தெரியுமா? அப்டி அவுங்களுக்கு பிடிக்கலேன்னா கூட நீ சத்தமா சொல்லி அவுங்க மைண்ட்ட இன்ஃபுளுயன்ஸ் பண்ணப் பாக்குறியா? இப்டி எல்லாம் இருக்கு இல்லங்க....

அதனாலதான் லாவோட்சூ அவரை அதிகப் பிரசங்கின்னு சொல்லிட்டுப் போயிட்டார். நாமளும் ஒரு நாளைக்கூ எவ்வளவோ பேசுறோம். பேசுங்க தப்பு இல்லை ஆனா பேசுறதுக்கு முன்னால இதோட அவசியம் என்னனு யோசிச்சுட்டு பேசலாமே....? இப்போ உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்றேன் டென்சன் ஆகாம கேளுங்க...

என்னை சுத்தியும் நிறைய பேரு பேசுறாங்க... ஆனா எனக்கு நிறைய பேர்கிட்ட இருந்து எனக்கு வர்றது எதுவுமே எனக்குத் தேவையே படாதது. பட் ஷேக் ஆஃப் சேயிங் பேசிகிட்டே இருக்காங்க.. ஹா ஹா ஹா!!!!

மறுக்க முடியாதுல்ல பாஸ் வாழ்க்கையில்லையா இதைக் கடந்துதானே போகணும்......! பிரசங்கியா கூட இருக்கலாம்........ஆனா அதிகப் பிரசங்கியா மட்டும் இருக்கவே கூடாதுங்கோ.......!!!!!!

அப்போ வர்ர்ர்ட்ட்டா!!!!

தேவா. S

Comments

//காலையில தூங்கி எழுந்து டீ வேணும்னு நினைச்சுகிட்டே இருந்தா டீ வந்துடுதா என்ன? பால் வாங்கணும், அடுப்ப பத்த வைக்கணும், டிக்காசன வைக்கணும்.. இவ்ளோ இருக்கு.//

... ஹி ஹி ஹி.. உங்க பீலிங்க்ஸ் புரியுதுங்க... டேக் இட் ஈஸி.

(ஹா ஹா ஹா.. அச்சச்சோ.. நா நினச்சு வேற பார்த்துட்டேன்.. நீங்க தூக்க கலக்கத்துல.. எந்திருச்சு டீ போடுற மாதிரி.. உங்க வைஃப் ரொம்ப லக்கிங்க.. )
இருந்தாலும்.. நீங்க பாவங்க.. ரெம்பவே பேசி கொடும பண்ணிருப்பாங்க போல இருக்கு..!!

சரி சரி.. விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ங்க.. :)
//என்னை சுத்தியும் நிறைய பேரு பேசுறாங்க... ஆனா எனக்கு நிறைய பேர்கிட்ட இருந்து எனக்கு வர்றது எதுவுமே எனக்குத் தேவையே படாதது. பட் ஷேக் ஆஃப் சேயிங் பேசிகிட்டே இருக்காங்க.. //

...ஹா ஹா ஹா..

ரொம்ப சாரி.. உங்க வேதனை புரியுதுங்க. அடுத்த முறை சூதானமா எஸ்கேப் ஆயிருங்க.. சரியா? :)
Chitra said…
பேசி பேசி உலகத்தை மாத்த முயன்றவங்க எல்லாம் தானே அதுக்கு ஒரு உதாரணமா இருந்தாங்க இப்போ எல்லாம் அப்டீ எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லோருமே ஹிப்போகிரேட்தான் இன்க்ளுடிங் மீ. இதுல என்ன ஒரு மேட்டர்னா சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு அப்டீன்றதுல எத்தனை சதவீதம் வேறு படுறாங்கன் அப்டீன்றத வச்சுதான் அதுல நல்லவங்க கெட்டவங்கன்னு பிரிச்சுக்கிறோம் தட்ஸ் ஆல்.



....WOW! நச்! நச்! நச்! செம கருத்து!
Anonymous said…
எப்படி பேசணும், எப்படி பேச கூடாது என்று நேரில் பேசுற மாதிரியே எழுதி இருக்கீங்க !!

ஒவ்வொரு பதிவையும் வித்தியாசம் காட்டி எழுதுற உங்களுக்கு என் பாராட்டுகள்.

ரசிகை

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த